வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-இல் (Settings) குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்யுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.அதை செய்யவில்லை என்றால் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டிற்கு பாதுகாப்பு இருக்காது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதென்ன மாற்றம்? அதை ஏன் செய்ய வேண்டும்? அதை செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? WhatsApp Settings வழியாக குறிப்பிட்ட மாற்றத்தை செய்வது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இந்த அலெர்ட் யாருக்கெல்லாம் பொருந்தும்?

சைபர் செக்யூரிட்டி அதிகாரிகளால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை ஆனது வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் அனைவருக்குமே பொருந்தும்.

வாட்ஸ்அப் ஆனது மெசேஜ்களை பகிர்வதற்கு மட்டுமல்ல, மற்றவர்களின் தகவல்களை திருடுவதற்கு கூட ஏதுவான ஒரு இடமாகும். ஆகையால் தான் இது ஹேக்கர்களை (Hackers) காந்தம் போல இழுக்கிறது!

பலரும் தங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டில் செய்யும் ஒரு தவறு!

வாட்ஸ்அப்பில் பல்வேறு வகையான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் போதிலும் கூட ஹேக்கர்களும், ஸ்கேமர்களும் ஏதாவது ஒரு திருட்டு வழியை கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-இல் அணுக கிடைக்கும் ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சத்தை மட்டும் ஹேக்கர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. சோகமான விஷயம் என்னவென்றால்.. அங்கே தான் நம்மில் பலரும் கோட்டை விடுகிறோம்!

அதென்ன செட்டிங்?

நாம் இங்கே பேசுவது - வாட்ஸ்அப்பில் அணுக கிடைக்கும் முதன்மையான பாதுகாப்பு அம்சமான தடையாய்-ஸ்டெப் வெரிஃபிகேஷனை (Two-step verification) பற்றித்தான்!உங்களில் சிலர் ஏற்கனவே இதை செய்து இருக்கலாம்.

ஒருவேளை செய்யவில்லை என்றால்.. உடனே அதை எனேபிள் (Enable) செய்யவும்!அதை செய்வது எப்படி என்கிற எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகள் இதோ:

வாட்ஸ்அப்பில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷனை எனேபிள் செய்வது எப்படி?

⭕உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறக்கவும்- பின்னர் வாட்ஸ்அப்பில் உள்ள செட்டிங்ஸ் (Settings) விருப்பத்தை திறக்கவும்.- அதன் பின்னர் அக்கவுண்ட் (Account ) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்- அதனை தொடர்ந்து டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (Two-step verification) விருப்பத்தை கிளிக் செய்யவும்.

பாதி வேலை முடிந்தது!

இப்போது டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷனை எனேபிள் செய்து உங்களுக்கு விருப்பமான ஆறு இலக்க பின் நம்பரை (six-digit PIN) உள்ளிட்டு அதை உறுதிப்படுத்தவும்.- அதனை தொடர்ந்து நீங்கள் அடிக்கடி அணுகக்கூடிய ஒரு மின்னஞ்சல் முகவரியை வழங்கும்படி கேட்கப்படும்.

ஒருவேளை நீங்கள் எந்தவொரு மின்னஞ்சல் முகவரியையும் சேர்க்க விரும்பவில்லை என்றால் ஸ்கிப் (Skip) என்பதை கிளிக் செய்யவும்- இப்போது நெக்ஸ்ட் (Next) என்கிற விருப்பத்தை கிளிக் செய்து (மின்னஞ்சல் முகவரியை அளித்து இருந்தால். அதை உறுதிசெய்துவிட்டு) சேவ் (Save) அல்லது டன் (Done) என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான். வேலை முடிந்தது!

வேறு என்னென்ன செய்தால் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் பாதுகாப்பாக இருக்கும்?

டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் மட்டுமல்ல வாட்ஸ்அப்பில் நீங்கள் தவறவிடக் கூடாத இன்னும் சில முக்கியமான பாதுகாப்பு அமைப்புகள் (security settings உள்ளன.அது எல்லாமே உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டிற்கு கூடுதல் பாதுகாப்பை சேர்க்கும்!

சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், வாட்ஸ்அப்பிற்கு ஸ்க்ரீன் லாக்-ஐ (Screen Lock) பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றனர்.

மிக முக்கியமாக எப்போதெல்லாம் வாட்ஸ்அப்பிற்கு அப்டேட் அணுக கிடைக்கிறதோ அதை உடனே பயன்படுத்த சொல்லியும் அறிவுறுத்துகின்றனர். அதே போல உங்கள் ஸ்மார்ட்போனிற்கு வரும் ஓஎஸ் அப்டேட்களையும் தவற விட வேண்டாம்.

அதுமட்டும் இல்லாமல் பக்ஸ் (Bugs) மற்றும் மால்வேர்களை (Malware) சரிசெய்ய உதவும் லேட்டஸ்ட் செக்யூரிட்டி பேட்ச்களையும் கூட தவற விட வேண்டாம். அது உங்கள் ஸ்மார்ட்போனிற்கு மட்டுமின்றி, அதில் உள்ள ஆப்களுக்குமான ஒரு பாதுகாப்பும் கூட!